திருவாரூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் காமராஜ்

Mar 29, 2020 03:16 PM 265

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள உழவர் சந்தை பேருந்து நிலையத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் காய்கறிகள் வாங்க வந்தவர்களுக்கு முகக் கவசம் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை எனக் கூறினார். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 364 பேர் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாவட்டத்திலிருந்தும் வந்தவர்கள் என கண்டறியப்பட்டு அதில் ஆயிரத்து 900 பேர் அடையாளபடுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 52 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted