நாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் தங்கமணி

Mar 30, 2020 05:43 PM 1781

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு யாரும் பாதிக்கப்படவில்லையென மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.


நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் முன்னிலையில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, வெளிநாடுகளில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்த ஆயிரத்து138 நபர்களில்122 பேர் 28 நாட்களை கடந்து விட்டதாகவும், 659 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.Comment

Successfully posted