ஓணம் பண்டிகை : வரும் 31-ம் தேதி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

Aug 27, 2020 04:16 PM 1642

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 31-ம் தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை நாளான 31-ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும் என ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 12-ம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகளவில் மலையாளிகள் வசிப்பதால், ஒவ்வொரு ஆண்டும், விடுமுறை வழங்கப்படுகிறது. ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பத்து நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் கடந்த 22ஆம் தேதி துவங்கி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் மலையாளிகளால் இந்தப் பண்டிகை மிகவும் வரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக மலையாளிகள் சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். திருவோணம் நாளில் மகாபலி தங்களது வீடுகளுக்கு வருவதாக கேரள மக்கள் நம்புகின்றனர். தமிழகத்தில் எப்படி தீபாவளி கொண்டாடப்படுகிறதோ அதேபோல், கேரளாவில் ஓணம் கொண்டாடப்படுகிறது.

புத்தாடை அணிந்து, பல வகைகளில் உணவுகள் தயாரித்து மகாபலிக்கு படைத்து கொண்டாடுகின்றனர். பத்து நாட்கள் வீட்டுக்கு முன்பு பூக்கோலம் போட்டு மகாபலியை வரவேற்கின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நட்சத்திரக் கூட்டம்...வானில் ஒரு அதிசயம்..பிரபஞ்சத்தின் முதல் ஒளியா? சென்னை மாவட்டத்தில் விடுமுறை குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் அந்த மாவட்டக் கலெக்டர் சீதாலட்சுமி, ''ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி திங்கள்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Comment

Successfully posted