தீபாவளிக்கு முன்பாக விற்பனைக்கு வருகிறது ஒன் பிளஸ் டிவி...

Aug 22, 2019 11:10 AM 463

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன் பிளஸ் தனது அடுத்த தயாரிப்பாக டிவியை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது. இதுவரை ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆக்சஸரீஸ் போன்றவை சந்தைகளில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இந்த ஒன் பிளஸ் டிவிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில் இந்தியாவிலும் பிறகு மற்ற நாடுகளிலும் இந்த டிவி ஆனது அறிமுகமாக உள்ளது. இந்த டிவியில் QLED model பேனல் உபயோகப் படுத்தப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தீபாவளிக்கு முன்பாக அதாவது செப்டம்பர் 26-ஆம் தேதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் அமேசான் இணையதளத்தில் மற்றும் ஒன் பிளஸ் ஷோரூம்களில் இந்த டிவியானது விற்பனைக்கு வருகிறது. 43 இன்ச் முதல் 75 இன்ச் வரை இந்த டிவிகள் விற்பனைக்கு வரலாம் எனவும், ஆனால் இதன் விலை நிர்ணயம் குறித்தோ,மற்ற சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted