கேரளாவில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறப்பு!

May 28, 2020 08:38 AM 585

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கேரள மாநிலத்தில், மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து ஆன் லைனில் மது விற்பனை செய்ய அம்மாநில அரசு இடையில் முடிவெடுத்தது. ஆனால் இதற்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அங்கு மதுக்கடைகள் இன்று முதல் இயங்குகின்றன. காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும். மது வாங்குவதற்குக் காலை 6 மணியிலிருந்து 10 மணிக்குள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக டோக்கன் இல்லாதவர்களுக்கு மது வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted