அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு!!

Aug 06, 2020 09:27 AM 1336

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 28 அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப்பணியாளர்களாக செயல் ஆற்றியபோது, நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்த அரசு ஊழியர்கள் 28 பேர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிவாரணைத் தொகையான தலா 25 லட்ச ரூபாய் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted