டிஸ்கவரி சேனலில் பிரதமர் மோடி

Jul 29, 2019 01:26 PM 1417

பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் மேன்vsவைல்ட் நிகழ்ச்சியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பயணம் ஒன்றை குறிக்கோளாக கொண்டு காடு, மழை என சாகசப்பயணம் மேற்கொள்ளும் இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். பயணம் மேற்கொள்ளும் போது என்னென்ன முன்னேற்பாடுகள், ஆபத்தில் சிக்கினால் எப்படி தப்பிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்படுவதால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு உண்டு

இந்நிலையில் மேன்vsவைல்ட் நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் இணைந்து பிரதமர் மோடி காடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பியர் கிரில்ஸ் வெளியிட்ட பதிவில், “180 நாடுகளின் மக்கள் பிரதமர் மோடியின் அறியப்படாத பக்கத்தை மக்கள் அறிவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் விலங்குகள் மற்றும் காடுகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்காகவே பிரதமர் மோடி இப்பயணத்தை மேற்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 12ம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

Comment

Successfully posted