திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொலை சம்பவங்களால் மக்கள் பீதி

Sep 23, 2021 08:15 AM 1923

திண்டுக்கல் அருகே இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர், தமது இருசக்கர வாகனத்தில் வட்டப்பாறை பகுதியில் சென்ற கொண்டிருந்தபோது, வழிமறித்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி தலையை துண்டித்தது கொலை செய்து. மேலும், ஸ்டீபனின் உடலை வட்டப் பாறையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வீசி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார், உடலையும், தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக, திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் மீது கொடைக்கானல், திண்டுக்கல் நகர் வடக்கு உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளதும், முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

Comment

Successfully posted