திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

Jul 23, 2019 05:05 PM 137

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் ஆலோசனை கூட்டம், வேலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. வீரமணி, நிலோபர் கபில், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், ஆர்.பி. உதயகுமார், சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் அமோக வெற்றி பெறுவார் என்று கூறினார். இந்த தேர்தலில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted