குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் டயாபரில் நச்சு ரசாயனம் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Sep 30, 2020 09:00 AM 1062

குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் டயாபரில் நச்சு ரசாயனம் கலந்து இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த டாக்சிக்ஸ் லிங்க் என்ற நிறுவனம் 20 டயாபர் மாதிரிகளில் நடத்திய ஆய்வில், பிதலேட் (Phthalate) என்ற நச்சு ரசாயனம், குழந்தைகளின் டயாபரில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ரசாயனம் குழந்தைகளின் உடலுக்குள் சென்று உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், ஆரம்பப்பள்ளி பருவத்திலேயே பாலியல் உணர்வுகளை தூண்டுவது போன்றவை ஏற்பட வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிதலேட் நச்சு ரசாயனத்தை பயன்படுத்த ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Comment

Successfully posted