பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்திய சோதனை :வெற்றி!!

Oct 21, 2021 03:17 PM 6103

அமெரிக்காவில் முதல்முறையாக பன்றியின் சிறுநீரகம் மனிதனுக்கு பொருத்தப்பட்டு அதன் செயல்பாடு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

image

அவருக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் நிறுத்தப்பட உள்ளதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகம், உறவினர்கள் அனுமதியுடன் பெண்ணுக்கு பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அந்த பன்றியின் சிறுநீரகம் நன்றாக செயல்பட்டு சரியான அளவு சிறுநீரை வெளியேற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.image

அமெரிக்காவில் 90,000க்கும் மேற்பட்டோர் மாற்று சிறுநீரகத்துக்காக 3 முதல் 5 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலையில், தற்போது இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதால் சிறுநீரக பற்றாக்குறையை போக்கிட முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
image

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காட்சிப்பதிவுகளுடன் காண

கீழே

 

 

Comment

Successfully posted