அரசியல் கட்சிக் கொடிகளின் தயாரிப்பு தீவிரம்

Mar 24, 2019 09:57 AM 81

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவையில் அரசியல் கட்சிக் கொடிகளின் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் இன்னும் சில தினங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ள நிலையில், அவை பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலையொட்டி கோவையில் கட்சிக் கொடிகளை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து கட்சிகளின் கொடிகளும் இங்கு சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் பேட்ஜ்கள், அரசியல் தலைவர்கள் முகமுடிகள் உள்ளிட்டவையும் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Comment

Successfully posted