நாட்டின் பொருளாதார மதிப்பை உயர்த்த வங்கிகளுக்கு குடியரசுத்தலைவர் அறிவுறுத்தல்

Feb 13, 2020 08:03 AM 218

நாட்டின் பொருளாதார மதிப்பை  350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் இலக்கை எட்டுவதில்,  மிகப்பெரிய நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்

மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள தேசிய வங்கி மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் நாட்டின் பொருளாதார அமைப்பு முறைக்கு ஆதாரமாக விளங்குபவை வங்கிகள்தான் எனவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் பொருளாதார மதிப்பை  350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் இலக்கை எட்டுவதில் வங்கிகள் மிகப் பெரிய   நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
 

Comment

Successfully posted