தனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதி!!

Jul 09, 2020 01:52 PM 398

தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட், டிசம்பர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதங்கள் என 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் இன்று தமிழக உயர்கல்வித் துறை சார்பில் இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து முடிவெடிக்காத நிலையில், கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்வியே எழவில்லை என அவர் கூறியுள்ளார். தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதங்கள் என 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted