ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடித்த விவகாரம் பிரியங்கா காந்தி விமர்சனம்!!!

Mar 30, 2020 05:35 PM 622

ஊரடங்கு காரணமாக, உத்தரபிரதேசம் திரும்பி வந்த தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடிக்கப்பட்டதற்கு பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.


வெளிமாநிலங்களில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்திற்கு வந்த தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தொழிலாளர்கள் அனைவரையும் பரேலி பகுதியில், சாலையில் அமரவைத்து அவர்கள் மீது குழாய் மூலம் வேகமாக கிருமி நாசினி பீய்ச்சி அடிக்கப்பட்டதற்கு, பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனவால் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு எதிராக நாம் அனைவரும் போராடுகிறோம் என உத்தரபிரதேச அரசால் சொல்லப்பட்டுள்ள நிலையில், தயவுசெய்து இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்ய வேண்டாம் என ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், தொழிலாளர்கள் ஏற்கனவே நிறைய பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரசாயனம் சேர்த்து அவர்களை இப்படி குளிக்க வைக்க வேண்டாம், இது அவர்களைக் காப்பாற்றாது, ஆனால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு அதிக அச்சுறுத்தல்களை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Comment

Successfully posted