லக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!

Oct 17, 2020 05:29 PM 4421

அக்ஷய்குமாரின் லக்ஷ்மி பாம்ப் திரைப்படம் மத ரீதியான உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காஞ்சனா திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள லக்ஷ்மி பாம்ப் திரைப்படத்தில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கடவுள் லக்ஷ்மியை கொச்சைப்படுத்தியுள்ளதாகவும், மூன்றாம் பாலினத்தவரை இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வண்ணம் படம் உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் “ஷேம் ஆன் யூ அக் ஷய்குமார்” என்ற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

Comment

Successfully posted