தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு

Sep 18, 2021 07:55 AM 471

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, இன்று பதவியேற்க உள்ளார்.

தமிழகத்தின் ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெறு பதவியேற்பு விழாவில், ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

கொரோனா பரவல் காரணமாக, பதவியேற்பு விழாவில் 500 நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Comment

Successfully posted