நயன்தாராவுக்கு நன்றி சொன்ன ஆர்.ஜே. பாலாஜி

Jan 12, 2020 12:35 PM 813

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,நயன்தாரா நடிப்பில் ஜனவரி 9ஆம் தேதி தர்பார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா அப்பப்போ வந்து சென்றாலும், திரையில் வரும் போது நம்மை கண் இமைக்காமல் பார்க்க வைத்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இதில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் திரைப் படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து ஆர் ஜே பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 %முடிந்து விட்டது. கன்னியாகுமரி மக்களுக்கும் கடவுளுக்கும் நன்றி. மேலும் எனது குழுவிற்கும் , நயன்தாராவுக்கும் நன்றி என கூறியுள்ளார்.

Comment

Successfully posted