ஆண் மாணவர்கள் மத்தியில் இப்படி பேசுவாரா ராகுல் ? - நடிகை காயத்ரி ரகுராம்

Mar 14, 2019 01:31 PM 1222

மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் சென்று அங்கு மாணவிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். இதில் மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இதன்பிறகு கன்னியாகுமரியில் திமுக கூட்டணியின் பிரச்சார தொடக்கவிழாவிலும் பங்கேற்றார்.

இந்நிலையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் பங்கேற்ற நிகழ்வை நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து டிவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.


அதில், "ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி நடந்துக்கொண்டே உரையாடிய செயல் ஒரு மாடல் கேட் வாக் நடை நடப்பதை போன்று இருந்தது" என்று கிண்டல் செய்துள்ளார். அவரது பார்வை மற்றும் உடை பெண்களை கவரும் வகையில் இருந்தாலும் அவரின் செயல் அவரது அறியாமையையே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.மேலும் உங்களால் ஆண் மாணவர்கள் படிக்கும் கல்லூரிக்கு சென்று இப்படி உரையாற்ற முடியுமா? என்ற கேள்வியையும் காயத்ரி ரகுராம் எழுப்பியுள்ளார்.

Comment

Successfully posted


Super User

கேள்விதயார்செய்து பதிலும்தயார்செய்து கேட்கப்பட்டது