காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்தது

Nov 25, 2019 09:35 AM 330

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 943 கனஅடியாக உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மூன்றாவது நாளாக 6 ஆயிரத்து 943 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி-யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

Comment

Successfully posted