மீண்டும் இலங்கையில் பிரதமராகும் ராஜபக்ச - மோடி வாழ்த்து!!

Aug 07, 2020 07:40 AM 1184

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இலங்கையில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, மொத்தம் 64 மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இலங்கை பொதுஜன முன்னணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தமிழர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted