ஆஸ்திரேலியா செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

Nov 17, 2018 11:02 AM 377

ஒருவாரகால அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் வியட்நாம் புறப்படும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.

வெளியுறவுத் துறை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை வியட்நாம் புறப்படும் குடியரசுத் தலைவர், அங்கு பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக கூறியுள்ளது.அங்கிருந்து புறப்பட்டு 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்ளும் அவர், அரசியல், பொருளாதாரம் குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் இருந்து வியட்னாமுக்கு செல்லும் முதல் குடியரசுத் தலைவர் என்பதும், ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.Comment

Successfully posted

Super User

miga arumai