3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்!

Aug 07, 2020 01:37 PM 1528

அடுத்த 48 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவ காற்று தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசும் என்பதால் குமரிக்கடல், அரபிக்கடல், கேரள- கர்நாடக கடலோர பகுதிகள், லட்சதீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted