திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Jun 12, 2019 08:52 AM 76

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். பெரியகுப்பம் பகுதியிலிருந்து, மணவாள நகருக்கு செல்ல மூன்று கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதேபோல் பயணிகளும் தண்டவாளத்தை கடந்து ரயில் நிலையத்தை அடையும் நிலை உள்ளது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. கான்கிரீட் பெட்டிகள் தயார் செய்யப்பட்டு சுரங்கப்பாதை அமைக்க தயார் நிலையில் உள்ளன. இதையடுத்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comment

Successfully posted