மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் வேண்டுகோள்

Oct 27, 2018 02:07 PM 378

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, மத்திய சுகாதாரத்துறை தேவையான மருத்துவக் குழுக்களை அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 16-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் இல்லை என குறிப்பிட்டார்.

Comment

Successfully posted