மோகன் வைத்யாவாக மாறிய sandy...கலகலப்பில் பிக்பாஸ் வீடு

Jul 22, 2019 05:38 PM 356

இன்று பிக்பாஸ் வீட்டில் 30 வது நாள்.கவின், சாக்‌ஷி, லாஸ்லியாவிற்கு இடையேயான காதல் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.நேற்று பிக்பாஸ் வீட்டில் ஒருவரை பற்றி சக போட்டியாளர்கள் பேசிய வார்த்தையை கமல்ஹாசன் கூறி, உங்களில் அது யார் சொன்ன வார்த்தை என கண்டுபிடிக்கயுங்கள் என கூறினார்.போட்டியாளர்களில் சிலர் சரியாகவும் சிலர் தவறாகவும் சொல்லினர்.

அதனை தொடர்ந்து நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். இப்படியே நேற்றைய நாள் முடிந்தது.இன்றைய பிக்பாஸ் முதல் ப்ரோமோவில் கவின், சாக்‌ஷியை பார்த்து நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது என பாட, அதற்கு வீட்டில் உள்ள அனைவரும் சிரிக்க, அதற்கு சாக்‌ஷி கவினை பார்த்து ’பண்ணுன எல்லா வேலையும் நீ, ஆனா என்ன பார்த்து பாடுற’ என பார்க்கிறார்.

இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியா கவினிடம் நான் செய்தது தவறு என கூறி மன்னிப்பு கேட்கிறார்.நீ நடிக்கிறனுக்கு சொன்னதுக்கு sorry எனக் கூறி இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர்.

மூன்றாவது ப்ரோமோவில் சாண்டி மாஸ்டர், மோகன் வைத்யா போல் வேடமிட்டு வீட்டில் வலம் வருகிறார்.அனைவரும் சாண்டியை டாடி..டாடி என அழைத்து கலாய்க்கின்றனர்.பின்பு சாண்டி, மோகன் வைத்யா போல அனைவரையும் முத்தமிடுகிறார்.அதற்கு மதுமிதாவோ இந்த மாதிரி அவரை கலாய்ப்பது தப்பில்லையா என கேட்க, அதற்கு கவினோ சும்மதானா கலாய்ச்சோம் என கூறுகிறார். இன்றைய பிக்பாஸ் வீடு நிச்சயம் கலகலப்பாக இருக்கும் என தெரிகிறது.

 

 

Comment

Successfully posted