திட்டக்குடி அருகே லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

Feb 16, 2020 06:41 AM 321

திட்டக்குடி அருகே, லாரி மோதி பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகள் ராதிகா 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  மாலை பள்ளி முடிந்து மிதிவண்டியில் தன் தோழியுடன் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாணவி ராதிகா வீட்டிற்கு சென்ற கொண்டிருந்தார்.

அப்போது நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று மாணவி ராதிகா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த கோர விபத்தில் மாணவி ராதிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted