தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்!

Aug 06, 2020 12:42 PM 3776

தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதியில் நகராட்சியின் சார்பில், உழைக்கும் மகளிருக்கு தமிழக அரசின் மானிய விலை அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 50 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனங்களை வழங்கினார். தொடர்ந்து, சிறு வணிகர்களுக்கான கடனுதவிகளையும் அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்றும், கொரோனா தொற்று குறைந்ததும், பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டபின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

Comment

Successfully posted