சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆர்யன் கானுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு

Oct 21, 2021 12:24 PM 4018

மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆர்யன் கானை நடிகர் ஷாருக்கான் சந்தித்து பேசினார். மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்ற வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் 2 முறை மறுத்ததையடுத்து, ஆர்யன் கான் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

image

இந்த நிலையில், மும்பை ஆர்தர் சாலை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை நடிகர் ஷாருக்கான் சந்தித்தார். இதற்கு முன்பு கடந்த வாரம் சிறையில் இருந்த ஆர்யன் கானுடன் ஷாருக் கான், அவரது மனைவி கவுரி ஆகியோர் வீடியோ கால் மூலம் பேசினார். இதனிடையே, ஆர்யன் கானின் ஜாமின் மனு வருகிற 26ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.image

Comment

Successfully posted