தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்!!

Jul 08, 2020 09:07 AM 4977

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, சின்னத்திரை படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து சின்னத்திரை படப்பிடிப்பை தொடர, தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி இன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்குகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அரசின் வழிகாட்டுதல்களை கண்காணிக்க ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Comment

Successfully posted