ஆன்மீக பயணத்தை தொடங்கினார் சிம்பு - வைரலாகும் புகைப்படம்

Dec 09, 2019 10:15 PM 2702

தாய்லாந்து சென்று திரும்பிய நடிகர் சிம்பு, கடந்த 6ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்தார். நாற்பது நாற்களாக கடும் கட்டுக்கோப்புடன் விரதம் இருந்து வந்த நிலையில், இன்று மாலையளவில் தனது சபரிமலை செல்லும் ஆன்மீக பயணத்தை தொடங்கி உள்ளார். தரிசனம் முடித்து திரும்புவதற்கு பத்து நாட்களாகும். கடைசியாக "வந்தா ராஜாவா தான் வருவான்" படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகி உள்ளது. சிம்புவின் சபரிமலை ஆன்மீகப் பயணம் முடிந்தவுடன், மீண்டும் அவர் திரைத்துறையில் தனது வெற்றி பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் "மாநாடு" படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அடுத்தாண்டு ஜனவரி 20 முதல் தொடங்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

மேலும், ஹன்சிகா மோத்வானி உடன் நடித்துள்ள "மகா" படத்தின் மீதமுள்ள காட்சிகளும் இந்த மாதத்தின் கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்திற்குள் முழுமையாக எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து தொட்டி ஜெயா படத்தை இயக்கிய V.Z.துரை உடன் நடிகர் சிம்பு நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நடிகர் சிம்பு தலையில் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு புறப்பட்டு செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comment

Successfully posted