அதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்!

Nov 29, 2020 01:06 PM 5065

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சிட்னி நகரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில், கேப்டன் ஆரோன் பின்ச், 69 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர், 77 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார். தொடக்கத்தில் நிதானம் காட்டிய ஸ்மித், பின்னர் அதிரடியில் மிரட்டினார். 62 பந்துகளை எதிர்கொண்ட அவர் சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

Comment

Successfully posted