இலங்கையை புரட்டிப் போட்ட 'புரெவி'

Dec 03, 2020 11:59 AM 1022

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயலால், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

திரிகோணமலைக்கும் - முல்லைத்தீவுக்கும் இடையே புரெவி புயல் கரையை கடந்த போது, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயலால், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வெள்ளத்தில் மிதக்கின்றன. தொடர் மழையால், யாழ்ப்பாணம் மாகாணத்தில் 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணம் மாகாணத்தில் 15 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 141 வீடுகள் பாதி சேதம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Comment

Successfully posted