எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

Aug 02, 2021 12:57 PM 2026

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மீனவர் ஒருவர் தலையில் படுகாயம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 10 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் நடுக்கடலில் இவர்கள் விசைப்படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் கலைச்செல்வன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

image

இதையடுத்து காயமடைந்த மீனவரை சக மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூடு சம்பவம் மீனவ மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted