"எரிவாயு குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்துக" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

Apr 16, 2022 06:36 PM 65138"கெயில் குழாய் பதிப்பதால் தனது நிலம் பறிபோகிவிடும் என்ற பயத்தில் விவசாயி கணேசன் தற்கொலை செய்து கொண்ட செய்தி மனவேதனையை அளிக்கிறது"

வேளாண் பிரச்சனைகளை ஆராய்ந்து உடனடி நிவாரணம் வழங்குவதற்கும், விவசாய நலத் திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

"வேளாண் தொழிலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எரிவாயு குழாய்களை அமைக்கும் பணியை வேடிக்கைப் பார்ப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்"

கெயில் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலைகள் ஓரமாக அமைக்க வலியுறுத்த வேண்டும்

"உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி
நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" 

                                                                                   - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 

Comment

Successfully posted