விழுப்புரத்தில் நகை பட்டறை தொழிலாளி மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை

Dec 13, 2019 09:13 AM 714

விழுப்புரத்தில் சயனைட் கொடுத்து மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்று நகை தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் முத்தோப்பு சலாமத் நகரை சேர்ந்த அருண் எனபவர், வீட்டிலேயே நகை பட்டறை வைத்து நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அருணுக்கு தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மூன்று நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட நஷ்டம் கூடுதலானது காரணமாக நகைப்பட்டரையில் பயன்படுத்தும் சயனைட் விஷம் கொடுத்து, மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன், வாட்ஸ் ஆப் குழு நண்பர்களுக்கு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், சூதாட்டத்தில் விளையாடியதன் காரணமாக இந்த நிலைக்கு வந்ததாகதெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted