காங்கிரஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

Oct 13, 2018 12:34 PM 327

போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக , காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதியன்றும், ராஜஸ்தானில் டிசம்பர் 2-ம் தேதியன்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெருமளவு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில் போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே தேர்தலை நடத்த , தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரியிருந்தனர்.

மேலும் வாக்குப்பதிவில் 10 சதவீத அளவுக்காவது ஒப்புகை சீட்டு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தனர். மத்திய பிரதேசத்தில் 60 லட்சம், ராஜஸ்தானில் 41 லட்சம் என போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியான ஆய்வுகளையும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இத்தகைய குறைபாடுகளைக் களைந்து விட்டு நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மனுவில் கேட்கப்பட்டிருந்தது .இம்மனுவின் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. அப்போது மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comment

Successfully posted