தேர்தல் பிரசாரம்: ரூ.200 கூலி கொடுத்து ஆட்களை திரட்டிய தினகரன் ஆதரவாளர்கள்

Apr 15, 2019 08:22 AM 247

திருவண்ணாமலை அருகே டிடிவி தினகரன் பிரசாரத்திற்கு இருநூறு ரூபாய் கூலிக்கு ஆட்களை திரட்டி கூட்டத்தை காட்டியது கண்கூடாக தெரிந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே டிடிவி தினகரன் பிரசாரம் செய்ய வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தினகரன் ஆதரவாளர்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து இரு நூறு ரூபாய் கூலிக்கு ஆட்களை அழைத்து வந்திருந்தனர். அப்படி அழைத்து வரப்பட்டவர்கள், தினகரன் வருவதற்கு தாமதமானதால் நெடு நேரமாக ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள்.

பின்னர் தினகரன் வந்து பேசிவிட்டு சென்ற பின்னர் ஆடுகளை அடைத்து செல்வதை போல மினி வாகனங்களில் அவர்களை ஏற்றி சென்றனர். இந்த காட்சிகளை கண்ட பொதுமக்கள் பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்து கூட்டம் சேர்க்கிறார்கள் என முணுமுணுத்தனர்.

Comment

Successfully posted