தமிழக மீனவர்கள் 8 பேருக்கு 3 மாதம் சிறை ரூ.60 லட்சம் அபராதம் -இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Oct 16, 2018 01:32 PM 380

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 8 பேர் ஆகஸ்டு 18-ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் மீதான வழக்கு கல்பிட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில், மீனவர்கள் 8 பேருக்கும் மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தலா ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Comment

Successfully posted