5 ஆண்டுகளில் 50 ஆண்டு கால வளர்ச்சியில் தமிழகம் - உள்ளாட்சித்துறை அமைச்சர்

Dec 02, 2020 07:01 PM 606

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மாநில கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், விலையில்லா கோழிக் குஞ்சுகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பேரூர், கரடிமடை, பூலுவாம்பட்டி, ஆலாந்துறை, மத்வராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

கால்நடை பராமரிப்பு துறை சார்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கோழிகள் வீதம், சுமார் 37 ஆயிரத்து 500 விலையில்லா கோழிகுஞ்சுகளும், பராமரிப்பு ஊக்கத்தொகையும், கட்சி பாகுபாடுகள் இன்றி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, தமிழக அரசின் நடவடிக்கைகளால், 5 ஆண்டுகளில் 50 ஆண்டு கால வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

Comment

Successfully posted