தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8,981 பேருக்கு கொரோனா தொற்று..!

Jan 08, 2022 05:18 PM 1465

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால், தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து, மீண்டும் ஒன்பதாயிரத்தை நெருங்கியுள்ளது.


தமிழ்நாட்டில், ஒரே நாளில் 8 ஆயிரத்து 981 பேருக்கு தொற்று உறுதியானதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 39 பேருக்கும், திருவள்ளூரில் 514 பேருக்கும், கோவையில் 408 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 817 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted