சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Aug 01, 2018 03:14 PM 1332

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, சென்னை  உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில், நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு ஒன்றில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணை திருப்தியில்லாதநிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தால், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்த விசாரணையை வரும் 8ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Comment

Successfully posted