ஸ்டெர்லைட் போராட்ட குழுவினரை சந்தித்த அமெரிக்க இளைஞரிடம் போலீசார் 3-வது நாளாக விசாரணை

Jan 01, 2019 08:35 AM 310

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்ட குழுவினரை சந்தித்த அமெரிக்க இளைஞரிடம் போலீசார் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் அமெரிக்காவை சேர்ந்த மார்க் ஷில்லா என்பவர் கடந்த சில நாட்களாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்து பேசியதாகவும் ஸ்டெர்லைட் குறித்து வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அந்த இளைஞர் தவறு செய்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்க இளைஞரை சந்தித்து பேசியதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பாத்திமா பாபு, ராஜா, ரீகன், பிரின்ஸ் ஆகியோருக்கு தூத்துக்குடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Comment

Successfully posted