8- வது அதிசயமாக திகழும் அதிசய மனிதர்

Dec 04, 2019 12:47 PM 1589

உலகில் 7 அதிசயங்களுக்கு இணையாக 8 வது அதிசயமாக  மல்யுத்த வீரர் வலம் வருகிறார். 

உலகின் ஏழு அதிசயங்கள் என்பது நாம் அறிந்தவை .... இதனை தவிர 7 அதிசயங்களுக்கு இணையான இருக்கும் கட்டடங்களுக்கும், டிசைன்களுக்கும் இந்த பட்டம் கொடுக்கப்படுகிறது.

உலகப்புகழ் பெற்ற மல்யுத்த வீர ஆந்த்ரே தி ஜெயண்ட் எட்டாவது அதிசயமாக புகழப்பட்டார். காரணம், அவரின் எடை 236 கிலோ, உயரம் 7 அடி 4 அங்குலம் என கூறப்படுகிறது.

இந்த எட்டாவது அதிசயம் என்பது அதிகார பூர்வமற்ற பட்டம் என கூறப்படுகிறது. உதாரணத்துக்கு பர்னே நீர்வீழ்ச்சி, வர்ஜீனியாவில் உள்ள இயற்கை பாலம், நயாகரா நீர்வீழ்ச்சி போன்ற இடங்கள் கூட எட்டாவது அதிசயம் என்று அழைக்கப்படுகின்றன.

இடங்கள் மட்டுமல்லாது மனிதர்கள் , விலங்குகள் ஆகியவையும் இதில் இடம்பெற்றிருக்கின்றனர் . அந்த வரிசையில் மல்யுத்த வீர ஆந்த்ரே தி ஜெயண்ட் எட்டாவது அதிசயமாகவும் , கிங்காங்’ கதாபாத்திரமான ராட்சத சிம்பன்ஸியும் எட்டாவது அதிசயமாகவும் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted