கூட்டணி தர்மத்தை என்றுமே மதிக்காத கட்சி திமுக: அமைச்சர் தங்கமணி

Jan 12, 2020 06:46 AM 4282

நாமக்கல் மாவட்டம் என்றுமே அதிமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி தர்மத்தை என்றுமே மதிக்காத கட்சி திமுக என்பற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் அறிக்கையே சான்று என்று கூறினார்.

இதனிடையே நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த தனலட்சுமியும், துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முனுசாமியும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தனியார் ஜவுளி உற்பத்தி ஆலையில் இரவுநேர காவலாளியாக பணியாற்றி வரும் முனுசாமி 3வது முறையாக தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted