அதிபரானால் ஹெச்1பி விசா மீதான தடையை நீக்குவேன் - ஜோபிடன்

Jul 02, 2020 09:58 PM 650

H -1B விசா மீது விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிகத் தடையை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நீக்குவேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்..

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களுக்காக வழங்கப்படும் H -1B விசா விநியோகத்திற்கு 2020 - ம் ஆண்டு இறுதிவரை தடை விதித்தார். இதனால் இந்தியநிறுவனங்களும், ஊழியர்களும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்த டிஜிட்டல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், அமெரிக்க அதிபரான டிரம்ப் H -1B விசா தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்துள்ளதை சுட்டிக் காட்டினார். தான் அதிபராக பதவியேற்றதுடன் இந்த தடை நீடிக்காது என்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் 11 மில்லியன் பேருக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 3 - ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜோ பிடனின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன..

Comment

Successfully posted