காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் படுகொலை

Jun 16, 2019 10:16 AM 127

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்லூர் பகுதியை சேர்ந்த அஜித் என்பவர், கடந்த 12ஆம் தேதி தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது ஓடஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் அஜித்தின் நண்பர் விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் விக்னேஷ், வின்சென்ட் செல்வராஜ் ஆகிய இருவர் மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நண்பர்களுக்கிடையே நடைபெற்ற தகராறு கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted