பீகாரில் தன்தாய் இறந்ததை அறியாத மகன் அவரை இழுக்கும் மனதை பிசையும் காட்சி!

May 27, 2020 09:14 PM 465

பீகார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் தனது தாய் இறந்ததை அறியாமல் அவரது மகன் எழுப்பிய காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து பீகார் மாநிலம் கதிஹார் பகுதிக்கு வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றி செல்லும் சிறப்பு ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த 35 வயதான அவ்ரீனா கதூன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அவ்ரீனாவின் உடலை முசாபர்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி வைத்த ரயில்வே பணியாளர்கள், ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்தனர். அப்போது, தனது தாயார் இறந்ததை அறியாத அவரது மகன், அவர் உறங்குவதாக நினைத்து எழுப்பிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Comment

Successfully posted