இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

Jan 09, 2019 08:28 AM 414

இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகுடன் கைது செய்யப்பட்ட அவர்கள் விசாரணைக்கு பின் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் 4 பேரையும் வரும் 10ம் தேதிவரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted