சொந்த கிணற்றிலிருந்து தண்ணீர் கொடுத்து பொதுமக்கள் தாகம் தீர்க்கும் விவசாயி

Jun 19, 2019 12:02 PM 101

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம்புதூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் விவசாயி ஒருவர் தனது கிணற்றிலிருந்து பொது மக்கள் தண்ணீர் விநியோகம் செய்து தாகம் தீர்த்து வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்புதூர் மேட்டு தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் இங்கு 1 வருட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி விவசாயி 6 மாத காலமாக தனது கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் அந்த விவசாயியை மனமார பாராட்டி வருகின்றனர். புதிய ஆழ்துளை கிணறுகளை அமைத்து தடையின்றி குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted